இயேசு கண்ணீர் விட்டார். யோவான் 11:35

வேதாகமத்தில் உள்ள இந்த சிறிய வசனத்திற்கு பின்பாக ஒரு பெரிய சம்பவம் அடைங்கியிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆம், வேதம் சொலுகிறபடி, இயேசு சிநேகித்த மூன்று நபர்களில் (யோவான் 11:5) ஒருவனாகிய லாசரு என்பவன் மரித்துப்போனான். இயேசுதாமே, லாசரு மரிப்பான் என்றும், அவனை அவர்தாமே ஜீவனொடு மீண்டும் எழுப்பப்போவதையும் முன்னமே அறிந்திருந்தார் (யோவான் 11:5). ஆகவே, இயேசு தம்முடைய சீஷருடனே பெத்தானியா நோக்கி சென்றார்.
அவர் அந்தக்கிராமத்திற்கு உட்பிரவேசிப்பதற்கு முன்னமே மார்த்தாள் அவரை கண்ணீரோடே வரவேற்றாள். பின்பு, இயேசுவின் வருகையை கேள்விப்பட்டு வந்த மரியாளூம் அவரை கண்ணீரோடே வரவேற்றாள். பின்பு, இயேசு கிராமத்திற்குள்ளே பிரவேசித்த போது, யூதர்கள் அவரை கண்ணீரோடே வரவேற்றார்கள். இவைகளை எல்லாம் பார்தவுடன், ஒரு மாபெரும் அர்புதத்தை நடபிக்க, மிக கம்பீரமாகவும், விசுவாசத்துடனும் வந்த இயேசுவை – முதலில் தேவஅன்பு இடைபட்டு, அவருடைய கண்களில் கண்ணீரை வரச்செய்தது. ஆவியின் வரம் (அர்புதம்) அல்ல ஆவியின் கனியே (அன்பு) இயேசுவை முதலில் ஆட்கொண்டது. ஆகவே, இயேசுவின் கண்ணீருக்கு பின்பாக ஒரு சமுதாயத்தின் கண்ணீர் துளிகள் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
பொதுவாக யூதர்கள், முக்கியமாக மத போதகர்கள் மற்றும் ரபீக்கள் பொது இடங்களில் கண்ணீர்விடாத அளவிற்கு தங்களை காத்துக் கொள்வார்கள். இயேசுவை அநேகர் ரபீயாகவும், தீர்க்கதரிசியாகவும், அவருடைய சீஷர்கள் அவரை மெய்யான தேவகுமாரனுமாக பார்த்தார்கள். ஆனாலும், இயேசு தேவனாயிருந்தும் அன்பினால் முலுதும் ஆட்கொண்டவராய் யூதர்கள், சீஷர்கள் மற்றும் ஸ்திரிகள் முன்னிலையில் தாம் மனுகுலத்தின் மீது வைத்திருந்த அன்பை கண்ணீர் மூலமாய் வெளிபடுத்தினார்.
இயேசு, இந்த உலகில் வாழ்ந்தபோது நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார் (அப்போஸ்தலர் 10:38) என்று வேதம் சொலுகிறது. நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு, அவர் எப்படி நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தாரோ அதே போல அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நன்மைசெய்கிறவர்களாய் சுற்றித்திரிய வேண்டும் என்று விரும்புகிறார். அவர், தேவஅன்பை தாம் மட்டுமே வைத்துக்கொள்ள நினையாமல் அதை நமக்கும் தந்தருள வாஞ்சையாய் இருக்கிறார். “மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோமர் 5:5). எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள் நாம்!
இந்த தெய்வீக அன்பை நாம் பெற்றுக்கொண்டோமாகில் அவற்றை நம்முடைய கிரியைகள் மூலமாய் வெளிபடுத்துவோம். இந்த அன்பை பெற்றவர்கள் எல்லோரையும் மன்னிப்பார்கள், எல்லோரையும் நேசிப்பார்கள், பட்சபாதத்தோடே நடவார்கள், இனவெறி இறாது, மேட்டுமை இறாது மற்றும் இவர்களூடைய சாந்தகுணம் தேவஅன்பின் சுகர்ந்த வாசனையை பரவச்செய்கிறதாய் விளங்கும்.
“அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவான் 4 : 8,9). இயேசுவாலே நாம் இந்த உலகில் பிழைத்து மற்றவர்களை பிழைக்கவைக்க விருப்பம் இருக்குமெனில், இந்த தெய்வீக அன்பை கிறிஸ்து இயேசு நம்மேல் வெளிப்படுத்தின பிரகாரம் நாமும் வெளிப்படுத்துவோம், தேவ பிள்ளைகளாய் இந்த உலகில் சுடர்விட்டு பிரகாசிப்போம், கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தப்படுவோம்!
Comments